கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றியத்தில் கால்நடைத்துறையினரால் 22.06.2024 முதல் 27.06.2024 வரை கால் மற்றும் வாய் நோய்க்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தாளவாடி, சூசைபுரம் மற்றும் சிமிட்டஹள்ளி ஆகிய கிராமங்களில் நடைபெற்றது. கால்நடை வளர்ப்போர் கால்நடை மருத்துவர்கள் ஆகியோரை ஒருசேரச் சந்திக்கும் வாய்ப்பு என்பதால் அருளகம் சார்பாக ரேவதி மற்றும் சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு பாறுக் கழுகுகள் குறித்த விழிப்புணர்வுத் துண்டறிக்கையை வழங்கினர். அப்பகுதியில் கன்னடம் பேசும் மக்கள் அதிகமிருந்ததால் துண்டறிக்கையினை கன்னடத்திலும் வழங்கினர். கால்நடைகளுக்குத் தடைசெய்யப்பட்ட மருந்துகள் குறித்தும் எடுத்துரைத்தனர். விழிப்புணர்வுப் பதாகையையும் காட்சிப்படுத்தினர்.
கல்மண்டிபுரத்தில் 15 கால்நடைகள்,சோளகர் தொட்டியில் 8 கால்நடைகள், தொட்டகாஜனூர் 11 கால்நடைகள்,ஜொர ஒசுர் 4 கால்நடைகள் மற்றும் காமன்புரம் 23 கால்நடைகளும் மொத்தம் 61 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. நிறையக் கால்நடைகள் இருந்தபோதும் கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் அங்குள்ள மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பது தெரிய வந்தது. தடுப்பூசி செலுத்தினால் கால்நடைகள் இறந்துவிடும் என்ற தகவலைத் தெரிவித்தனர்.