சங்க இலக்கியத்தில் இயற்கை, அகம்,புறம்,ஏறு தழுவுதல் உட்பட பிற செய்திகள் - பயிலரங்கம்
நாள்: 29-01-2017 ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை 9.30 மணி முதல் 4 மணிவரை
இடம்: மண்டல அறிவியல் மையக் கலைஅரங்கம், கொடிசியா வழி, அவினாசி சாலை, கோயமுத்தூர்
நடத்துநர்: திருமதி வைதேகி ஹெர்பர்ட் அவர்கள்
ஆசியுரை: சுவாமி குமரகுருபரர், அவர்கள், கௌமார மடாலயம்
வாழ்த்துரை: திரு. பா.நா.காளிமுத்து அவர்கள் சங்க இலக்கியத்தில்
பறவைகள்: முனைவர். க.இரத்னம்
நன்றியுரை: சு.பாரதிதாசன்
ஒருங்கிணைப்பு: அருளகம் (இயற்கைப் பாதுகாப்பு அமைவனம்)
முன்பதிவு அவசியம், தொடர்புக்கு; 9486455399 & 9843211772
சங்க இலக்கியப் பயிலரங்கம் அருளகம் அமைப்பு ஏற்பாடு
அனைவரும் சங்கப் பாடல்களை புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு சங்க இலக்கியத்தில் இயற்கை, அகம்,புறம்,ஏறு தழுவுதல் உட்பட பிற செய்திகள் என்ற தலைப்பில் பயிலரங்கம் ஒன்றை வருகின்ற 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அருளகம் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. கோயமுத்தூர் மண்டல அறிவியல் மையத்தில் (கொடிசியா செல்லும் வழி) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் அமெரிக்கா வாழ் தமிழரான வைதேகி ஹெர்பர்ட் சிறப்புரையாற்றவிருக்கிறார். கௌமார மடாலய குமரகுருபர சுவாமிகள் ஆசியுரை வழங்க பா.நா.காளிமுத்து வாழ்த்துரை வழங்குகிறார். சங்க இலக்கியத்தில் பறவைகள் பற்றி க.ரத்னம் கலந்துரையாடவிருக்கிறார். சங்க இலக்கியத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
முன்பதிவு அவசியம் தொடர்புக்கு; 9486455399 & 9843211772
வைதேகி ஹெர்பர்ட் பற்றி
தமிழகத்தின் தூத்துக்குடியைச் சேர்ந்த வைதேகி ஹெர்பர்ட் தற்போது அமெரிக்காவில் 40 ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர் . சங்க இலக்கியங்களின் அழகால் ஈர்க்கப்பட்டு 18 சங்க நூல்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். மேலும் பதினென்கீழ்க்கணக்கில் உள்ள 6அக நூல்களையும், திருக்குறளையும்,, 6 ஆம் நூற்றாண்டின் முத்தொள்ளாயிரம் என்ற நூலையும், 7 ஆம்நூற்றாண்டின் பாண்டிக்கோவையையும் மொழிபெயர்த்துள்ளார். மொழிபெயர்ப்பில் முதலில் தமிழ்ப்பாடலை வழங்கி, பிறகு ஆங்கில மொழிபெயர்ப்பையும், பிறகு பதம் பிரித்து பொருள் தரும் முறையைக் கையாண்டுள்ளார். பல பேர் செய்ய வேண்டிய இப்பணியினைத் தனி ஒருவராக தனது கடுமையான உழைப்பினாலும் விடாமுயற்சியாலும் தன்னலம் பாராது தவம் போலச் செய்து வருகிறார்.
தமிழ்த் துறை சாராத அனைத்து மக்களும் சங்கத்தமிழ் படித்து இன்புற வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டுவரும் இவர் சங்க இலக்கிய அகராதி ஒன்றையும் உருவாக்கியுள்ளார். வெறும் புத்தகங்களோடு முடங்கிவிடாமல் அனைவருக்கும் போய்ச்சேர வேண்டும் என்ற நோக்கில் அனைத்தையும் வலைத் தளத்தில் பதிவிட்டும் வருகிறார். அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கவும் அயராது பாடுபட்டு வருகிறார். கூடுதல் விவரங்களுக்கு https://sangamtranslationsbyvaidehi.com/