Global Tiger Day
அரும்புலி வாழும் பல்லுயிர்ச் செழிப்புமிக்க முதுமலைக்கு உங்களை வரவேற்கிறோம்
----------------------
பூகோளப் புலிகள் நாள்
Global Tiger Day
---------------
மானாட....புலியாட ....
என்ற தலைப்பில்
***
"பொம்மலாட்டம்' நிகழ்வும்
"ஒப்புரவு ஓவியம்" வரையும் பயிற்சியும் நடைபெறும்
±++++++++**
நாள் : 29-07-2022, வெள்ளிக்கிழமை`
இடம்: தெப்பைக்காடு & கார்குடி, முதுமலை புலிகள் காப்பகம்
+++++++++
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
++++++
முதுமலை புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் அருளகம் அமைவனம்
பூகோளப் புலிகள் நாளை முன்னிட்டு 29. 7 .2022 அன்று முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டிலுள்ள வரவேற்பு மையத்தில் "மானாட.. புலியாட' என்ற தலைப்பில் பொம்மலாட்டம் நடந்தது. புலிகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொம்மலாட்டம் ஆனந்தராஜ் குழுவினர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர். புலிகள் வாழும் காடு பல்லுயிர்ச் செழிப்புமிக்க காடாக இருக்கும். தாவர உண்ணிகளைக் கட்டுக்குள் வைத்து காடு செழிக்க மறைமுகமாக உதவும் என்பதையும் எடுத்துரைத்தனர். இதைச் சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர். மற்றொரு நிகழ்வாக ஒப்புரவு ஓவியம் என்ற தலைப்பில் எளிய முறையில் புலியை ஓவியமாக வரைவதற்கான பயிற்சியை ஓவியர் ரகுநாத் கிருஷ்ணா அவர்கள் வழங்கினார் . இதில் கார்குடி அரசு உண்டு உறைவிடப் பள்ளி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வரைந்து பழகி மகிழ்ந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுமலைப் புலிகள் காப்பகமும் அருளகம் அமைப்பினரும் செய்திருந்தனர். T
23 புலியை உயிரோடு பிடித்ததையும் அதைப் பிடிக்க உதவிய வேட்டை தடுப்புக் காவலர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது .
பூகோளப் புலிகள் நாளை முன்னிட்டு இன்று வாழைத்தோட்டத்திலுள்ள ஜீ ஆர் ஜி மேல்நிலைப் பள்ளியில் ஒப்புரவு ஓவியம் வரையும் பயிற்சி அருளகம் இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு சார்பாக நடைபெற்றது.
இதில் பள்ளி மாணாக்கர்கள் ஆர்வமுடன் பங்கு கொண்டனர். உயிரினங்கள் மீது மாணாக்கர்களுக்கு நேயத்தையும் அவற்றைப் பாதுகாப்பதற்கான அவசியத்தையும் வலியுறுத்தும் விதமாக ஓவியம் வரையும் நிகழ்வுக்கு ஒப்புரவு ஓவியம் எனப் பெயரிடப்பட்டது என நிகழ்ச்சியை அறிமுகப்படுத்திப்பேசிய அருளகத்தின் செயலர் சு. பாரதிதாசன் குறிப்பிட்டார். பள்ளித் தலைமையாசிரியர் தி. குமரன் அவர்கள் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
ரகுநாத்கிருஷ்ணா அவர்கள் ஓவியம் வரைந்துகொண்டே மாணாக்கர்களுக்கு புலி குறித்த அறிவியல் பூர்வமானத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். புலிகளின் ஒப்பற்ற தகவமைப்பு குறித்து அவர் விளக்கியவிதம் மாணாக்கர்களைக் கவரும் வண்ணம் இருந்தது. மாணாக்கர்கள் புலிகள் குறித்துக்கேட்டதற்கும் ஆர்வமுடன் பதலளிக்கப்பட்டது.
இறுதியில் பள்ளித்துணைத் தலைமையாசிரியர் ஜே. ரவி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருகளத்தின் களப்பணியாளர் பிரபு கணேசன் அவர்கள் ஒருங்கிணைத்தார்.